“முடிவு கட்டுங்க”… MLA-க்கள், அமைச்சர்களுக்கு தடை…. இரவோடு இரவாக CM விஜய்யின் அதிரடி ஆக்ஷன்….!

By Nanthini on ஆடி 8, 2026

Spread the love

தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லாத ஆய்வுகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் அமைச்சர் கீர்த்தனா நடத்திய ஆய்வும், அங்கு எழுந்த சர்ச்சைகளும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேவையின்றி தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ள முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) வரம்பு மீறாமல் இருக்க அவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் இந்தத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.