இது லிஸ்ட்லேயே இல்லையே…! 100 தொழில் அமைப்புகளைச் சந்தித்த பாலாஜி…. கோவையில் ஆட்டம் காணும் அதிமுக…!!

By Devi Ramu on சித்திரை 17, 2026

Spread the love

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழும் கோயம்புத்தூரில், இம்முறை மாற்றத்தை ஏற்படுத்த செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியிலேயே முகாமிட்டுள்ள அவர், அப்பகுதியின் பிரதான பலமான குறு மற்றும் சிறு தொழில் முனைவோரைத் தேடிச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். கடந்த தேர்தலில் கோவையில் முழுமையாகத் தோல்வியைத் தழுவிய திமுகவிற்கு, பாலாஜியின் இந்த அதிரடி வருகை புதிய நம்பிக்கையைத் தந்துள்ளதோடு, எஸ்பி வேலுமணி தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பொருளாதார உற்பத்தியில் கோவையின் பங்கை 15-லிருந்து 25 சதவீதமாக உயர்த்துவதே தனது இலக்கு என அவர் அறிவித்துள்ள வாக்குறுதி தொழிலதிபர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில் அமைப்புகளுடன் அவர் நடத்தி வரும் தொடர் ஆலோசனைகள், தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன. தொழில் நகரமான கோவையில் வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தி அவர் வகுத்துள்ள இந்த வியூகம், அதிமுகவின் செல்வாக்கைச் சரிக்குமா என்பது பெரும் விவாதமாக மாறியுள்ளது.