Connect with us

பாலு மகேந்திராவுக்கே தெரியாமல் அவருக்கு உதவி இயக்குனராகப் பணியாற்றிய பாலா… இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

CINEMA

பாலு மகேந்திராவுக்கே தெரியாமல் அவருக்கு உதவி இயக்குனராகப் பணியாற்றிய பாலா… இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.

இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.

   

90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை.

   

இதற்கிடையில் அவர் முழுக்க முழுக்க தனக்குப் பிடித்தது போன்ற வீடு மற்றும் சந்தியா ராகம் போன்ற கதைகளைப் படமாக்கினார். வீடு படத்தை தானே மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரித்தார். அந்த படத்தில்தான் இயக்குனர் பாலா முதல் முதலாக உதவி இயக்குனராகப் பணியாற்றினார். ஆனால் அவர் அந்த படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியது பாலு மகேந்திராவுக்கே தெரியாதாம்.

 

எதோ புரொடக்‌ஷன் பாயாகதான் அவர் ஷூட்டிங்கில் இருக்கிறார் என்று நினைத்தாராம். அதனால்தான் அந்த படத்தில் பாலாவின் பெயர் உதவி இயக்குனர் என்று வராமல் புரொடக்‌ஷன் உதவி என்றுதான் வரும். அதன் பின்னர் அவரிடம் உதவி இயக்குனராகி, அவரின் மகன் போன்ற ஸ்தானத்தைப் பெற்றார். பாலு மகேந்திராவிடம் இருந்து வெளிவந்து முதல் முதலாக முத்திரைப் பதித்த இயக்குனரானார் பாலா.

More in CINEMA

To Top