#image_title
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் KPY பாலா. இப்போது திரைப்படங்களிலும் பாலா நடித்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பாலா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இப்போது பாலா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த வயதிலும் பாலா தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொள்வது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது என பாலா செய்த உதவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரன்ஸ் மாற்றம் என்னும் சேவையை தொடங்கினார். இந்த சேவையில் KPY பாலா எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் சிறு வயது முதலே லாரன்ஸ் ஆல் வளர்க்கப்பட்டவர்களும் இப்போது மாற்றம் சேவையில் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு பெண்மணிக்கு பாலா இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டிபன் சென்டர் வைத்து கொடுத்துள்ளார். இது ஒரு ஏழைத்தாயின் இலட்சியம். டிபன் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
இதனால் தான் டிபன் சென்டர் வைத்து கொடுத்ததாக பாலா கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். முதலில் சர்ப்பிரைஸ் அளிக்கும் விதமாக பாலா அந்த பெண்ணின் கண்களை மூடி அழைத்து வந்து டிபன் சென்டரை காண்பிக்கிறார். அதனை பார்த்ததும் அந்த பெண் சந்தோசத்தில் திகைத்து நிற்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. KPY பாலாவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…