தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து ஆர்த்தி தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து செய்தியை அறிவித்ததாகவும் அவரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை எனவும் சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இப்போது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து செய்திதான் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் சினிமா விமர்சகரான பயில்வான் ஆர்த்தி ஜெயம் ரவி விவாகரத்து செய்தி பற்றி கூறியதாவது, ஜெயம் ரவி குடும்பத்தை விட அவரது மனைவி ஆர்த்திக்கு சொத்துக்கள் அதிகம்.
ஜெயம் ரவிக்கு சினிமா மார்க்கெட் போயிடுச்சு. வெளி உள்ள படங்களை சரியாக தேர்வு செய்யாததால் என்னவோ அவரது மார்க்கெட் குறைஞ்சிருச்சு. ஜெயம் ரவியை வைத்து அவங்க மாமியார் படம் எடுக்குறாங்க. ஆனா ஜெயம் ரவி சம்பளம் உயர்த்தி கேட்டதாக தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையில் மனக்கசப்பு வந்திருக்கு. ஆர்த்தியை பொறுத்த வரைக்கும் அவங்க ரொம்ப அழகான பொண்ணு.
அவங்க மேற்கத்திய நாகரீகத்தை ஃபாலோ பண்றவங்க. ஃப்ரெண்ட்ஸ் கூட, கணவர் கூட வெளியே போறது என ஜாலியா தான் இருப்பாங்க. ஆர்த்தி அடிக்கடி டூர் போவாங்க. ஒரு நடிகருக்கும் ஆர்த்திக்கும் பேஸ்புக்கில் கருத்து வேறுபாடு வந்திருக்கு. அது அப்பவே பேசி சரி பண்ணிட்டாங்க. மனைவி அழகா இருப்பதால் ஜெயம் ரவிக்கு ஒரு கட்டத்துல சந்தேகம் வந்ததா தெரியுது. நான் ஜெயம் ரவி உணர்ச்சிவசப்பட்டு விவாகரத்து முடிவ எடுத்துட்டாரு.
நான் ஆர்த்தியோட அம்மா கிட்ட பேசினப்போ அவங்க சொன்னது, என் பொண்ணு அடிக்கடி ஜெயம் ரவிகிட்ட சண்டை போடுவா. அது எனக்கு தெரியும். ஆனா அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சமாதானம் ஆயிடுவாங்க. ஆனா இந்த முறை ரெண்டு பேருக்கும் இடையில் என்ன சண்டை என்று எனக்கு தெரியல. நிறைய டைம் ஆர்த்தி ஜெயம் ரவியிடம் பேச முயற்சி பண்ணி இருக்கா. ஆனா அது முடியல அப்படின்னு சொன்னாங்க. ஆர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்துல இருந்து ஜெயம் ரவியுடன் எடுத்த போட்டோஸ டெலிட் பண்ணாலும் இரண்டு பேருக்கும் மகன்கள் இருப்பதை மறுக்க முடியாது என கூறியுள்ளார்.