Connect with us

“ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள்”.. சொன்னது பலிச்சிடுச்சு.. சோகத்தில் மூழ்கிய பாக்கியலட்சுமி குடும்பம்..!

CINEMA

“ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள்”.. சொன்னது பலிச்சிடுச்சு.. சோகத்தில் மூழ்கிய பாக்கியலட்சுமி குடும்பம்..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தில் இருந்து வருகின்றது. அதேசமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சினையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகின்றார்.

   

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் குடும்பப் பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விஷயங்களை தியாகம் செய்கிறார் என்பதை கருப்பொருளாக வைத்து கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படி தினம் தோறும் புதுவிதமான திருப்புங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் சூழலில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களுக்கு இயக்குனர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

   

 

அதாவது ராமமூர்த்தி வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பாக பேசி மிகவும் சந்தோசமாக இருக்கின்றார். அப்போது பாக்கியாவை பார்த்து, பாக்கியா நீ ரொம்பவும் நல்ல பொண்ணுமா, மத்தவங்களுக்காக ஓடி ஓடி உன் வாழ்க்கையை நீ வாழாமல் விட்டு விடாதே என்று சொல்லிவிட்டு செல்கின்றார். அதன் பிறகு ஈஸ்வரி வந்து எழுப்பி பார்க்க ராமமூர்த்தி எழும்பாமல் இருக்க மொத்த குடும்பத்தினரும் வந்து ராமமூர்த்தியை எழுப்புகின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் கத்தி அழுகிறார்கள். இப்படி இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top