“சிஎஸ்கே-வுக்கு அடுத்த அடி…” காயத்தால் விலகிய ஆயுஷ் மாத்ரே…. ரன் மழை பொழிய போகும் அந்த புது வீரர் யார்…?

By Devi Ramu on சித்திரை 20, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் தொடர் காயங்களால் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே தோனி, நாதன் எல்லிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், தற்போது அதிரடி பேட்டர் ஆயுஷ் மாத்ரேவுக்கும் இடது கால் தொடையில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. நடப்பு சீசனில் சிஎஸ்கே தரப்பில் அதிக ரன்கள் (201 ரன்கள்) குவித்த மாத்ரே விளையாட முடியாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதியை முறையாகக் கவனிக்காததே இத்தகைய தொடர் காயங்களுக்குக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்றாக அதிரடி வீரர் உர்வில் பட்டேலை பிளேயிங் லெவனில் சேர்க்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சைத் துவம்சம் செய்யும் திறன் கொண்ட பட்டேல், ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடியுடன் இணைந்து வலுவான அடித்தளத்தை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க இன்னும் மீதமுள்ள 8 போட்டிகளில் குறைந்தது 7-ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை அணிக்கு, அடுத்ததாக மும்பை மற்றும் குஜராத் அணிகளுடன் மோதவிருக்கும் போட்டிகள் வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ளன.