#image_title
இந்தப் பொங்கல் தனுஷ் பொங்கலா..? இல்லை சிவகார்த்திகேயன் பொங்கலா? என்று சொல்லும் அளவிற்கு அயலான், கேப்டன் மில்லர் ஆகிய இரு படங்களும் வெவ்வேறு கதைக்களத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறதா என்பது குறித்துப் பார்ப்போம். 2023 ஆம் பொங்கல் எப்படி தல, தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக துணிவு, வாரிசு படங்களைக் களம் இறக்கியதோ அதேபோல் இந்த வருட பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. மேலும் இப்படங்களுடன் விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ், அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர் 1 ஆகிய படங்களும் பொங்கல் ரேஸில் இடம் பிடித்திருக்கின்றன.
#image_title
இந்த 4 திரைப்படங்களும் இன்று வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்திய வேளையில் அயலான், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களைத் தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
அயலான்
கிட்டத்தட்ட 7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு கடந்த வருடத்தில் மீண்டும் விடுபட்ட ஷூட்டிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை நிறைவு செய்து பொங்கலுக்கு இனிக்கும் கரும்பாக அயலான் ரிலீஸ் ஆகியுள்ளது. இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
#image_title
இப்படம் பற்றி எக்ஸ் தளத்தில் வெளியான விமர்சனத்தின் படி, படம் தொடங்கிய முதல் சில காட்சிகள் சுவாரஸ்யமாகவும், அடுத்து சிவகார்த்திகேயன் ஏலியன் காட்சிகள் வரும்போது பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லாமல் விறுவிறுப்பாகவும் செல்கிறது எனவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்துப் பார்க்கும் படியாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் காமெடிக் காட்சிகள் முதல் பாதியில் படத்திற்கு வலு சேர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது பாதியில், ஆக்சனிலும், ஏலியன் சிவகார்த்திகேயன் கலக்கலான காம்போவும் ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும், முதல் பாதிக்குப் பின் விறுவிறுப்பாகவும் கதை நகர்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு அளித்த மதிப்பெண்கள் 3.5 /5.
கேப்டன் மில்லர்
தனுஷின் மூன்று வருட தவத்திற்குப் பின் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர் ஆக்சன் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
படத்தின் முதல் பாதியில் தனுஷ் ஸ்கோர் செய்கிறார். தனுஷின் மெருகேற்றிய நடிப்பு இதிலும் பக்க பலமாக அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மேலும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. ஆனால் சில இடங்களில் படம் சற்று வேகத்தைக் குறைத்து வேறு ரூட்டில் பயணிக்கிறது. ஆனால் அதன்பிறகு வரும் இண்டர்வெல் சீன்கள் அடுத்த பாதி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்ட வைக்கிறது.
#image_title
இரண்டாம் பாதியில், படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நம்மை சீட்டின் நுனியின் உட்கார வைக்கிறது. கில்லர் கில்லர் என்ற பாடல் திரையரங்கையே அதிர வைக்கிறது. சிவ்ராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் தங்களது பங்களிப்பைச் சரியான முறையில் செய்திருக்கின்றனர். மேலும் வில்லன் கதாபாத்திரம் இன்னும் சற்று வலிமையாக இருந்திருக்கலாம் எனவும் மொத்தத்தில் ஆக்சனை விரும்பும் ரசிகர்களுக்கு இது தரமான தனுஷ் படம் எனவும் X தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.
#image_title
மொத்தத்தில் அயலான், கேப்டன் மில்லர் ஆகிய இரு படங்களுமே கொஞ்சம் கூட சுவாரஸ்யத்திற்குப் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் ரேஸில் முந்துவது யார் என்று போகப் போகத்தான் தெரியும்.
இந்தப் படத்திற்கு அளித்த மதிப்பெண்கள் 3.5 /5.
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…
ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…