#image_title
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பற்றி தெரியாத உலக நாடுகளே இல்லை. தனது தந்தையின் மறைவிற்குப் பின் வடகொரியாவின் அதிபர் பொறுப்பை ஏற்று கடும் சட்டதிட்டங்களால் நாட்டையே கவச குண்டலமாகப் பாதுகாத்து வருகிறார். அவ்வப்போது ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார். உலக நாடுகளையே தனது அதிரடி ராணுவ நடவடிக்கைகளால் ஆட்டம் காண வைக்கும் கிம் ஜாங் உன் தனது பயணத்திற்காக அதிகம் விரும்புவது ரயிலைத் தானாம்.
#image_title
ஏனென்றால் வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங் மற்றும் அவரது மகனும், கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் இருவரும் ஜெட் விமானத்தில் பறக்க பயந்ததாக கூறப்படுகிறது. சோதனை ஓட்டத்தின் போது தங்களது ஜெட் வெடித்ததைக் கண்டு அவர்கள் விமான பயணத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு அவர்கள் ரயில் பயணத்தைத் தொடங்க அதுவே அவர்களது குடும்ப பழக்கமாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒரு நாட்டின் அதிபருக்காகவே பிரத்யேகமாக ரயில்பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அது கிம் ஜாங் உன் -க்கு மட்டும் தான். இந்த ரயிலில் அப்படி என்ன விஷேசம் தெரியுமா?
#image_title
கடந்த வருடம் ரஷ்யாவிற்கு செல்ல வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயன்படுத்திய இந்த ரயிலில், ராக்கெட் லாஞ்சர் தொடங்கி பார்பிக்யூ சிக்கன் வரை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ள ரஷ்யாவிற்கு, கிம் ஜாங் உன் 20 மணி நேரம் ரயிலிலேயே பயணித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 1180 கி.மீ. தூரத்தில் உள்ள ரஷ்யாவிற்கு, கிம் ஜாங் உன் விமானத்தை பயன்படுத்தாமல் ரயில் மூலமே பயணித்துள்ளார். கிம் ஜாங் இல் கடந்த 2001ம் ஆண்டு புதினை சந்திப்பதற்காக, ரயிலில் 10 நாட்கள் பயணித்து மாஸ்கோ சென்றார். அந்த குடும்ப பழக்கத்தை தான் தற்போதைய வடகொரிய அதிபரான கிம் ஜான் உன்னும் பின்பற்றி வருகிறார். இந்த ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
#image_title
மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் ஜப்பானின் புல்லட் ரயில்களுடன் ஒப்பிடுகையில், கிம் ஜாங் உன் பயன்படுத்தும் ரயில் மிகவும் கனமானது. அதிகபட்சமாக மணிக்கு 59 கிமீ வேகத்தில் மட்டுமே இந்த ரயிலை செலுத்த முடியும். காரணம் இதில் இடம்பெற்றுள்ள 20 பெட்டிகளும் குண்டு துளைக்காத கவச பாதுகாப்பு அம்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்கினாலும் ரயிலுக்கு எந்த பாதிப்பும் வராது என கூறப்படுகிறது. இதில் மாநாட்டு அறைகள், பார்வையாளர் அறைகள் மற்றும் படுக்கையறைகள் உள்ளன. செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் பிளாட்-ஸ்கிரீன் தொலைக்காட்சிகள், விளக்கப்படங்களும் நிறுவப்பட்டுள்ளன.
#image_title
வடகொரிய அதிபரின் இந்த ரயிலுக்கு முன்பாக ஒரு ரயிலும், பின்புறம் ஒரு ரயிலும் பயணிக்கும். காரணம் அதில், முன்னே செல்லும் ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பின்னே வரும் ரயில் பாதுகாவலர்கள் பயணிப்பற்கும் செல்லும். மேலும் அந்த ரயில் நிலையங்களில் வழியாக வேறு எந்த ரயிலும் செல்லாதவாறு மின்சாரம் துண்டிக்கப்படும். போதுமான அளவிலான ஆயுதங்களுடன், ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் வசதி கூட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#image_title
பயணத்தின் போது வடகொரிய அதிபருக்கான உணவை தயாரிப்பதற்கான ஒரு பிரத்யேக உணவகமும் ரயிலில் இடம்பெற்றுள்ளது. பன்றி பார்பிக்யூ, இறால் போன்ற உணவு வகைகளுடன், விலையுயர்ந்த பிரெஞ்ச் ஒயின் போன்றவையும் இந்த ரயிலில் கிடைக்கும் என வட கொரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…