#image_title
தமிழ் சினிமாவில் இப்போதும் ஜனகராஜ் டயலாக் பேசும் அழகே தனிதான் என்று பலரும் ரசிப்பது உண்டு. பெரும்பாலான படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக இருப்பார். அவ்வப்போது அவரது ஸ்டைலில் டயலாக் பேசி ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பார். பாட்ஷா, அண்ணாமலை, அருணாசலம் போன்ற படங்களில் ரஜினிக்கு நண்பராக நடிக்கும் அளவுக்கு முக்கியமானவராக இருந்தவர். கே. பாக்யராஜ் கண்டுபிடிப்புகளில் இவரும் ஒரு அரிய கலைஞர்தான். ஆண்பாவம் படத்தில், சக்கரை பட்டியில் ஓட்டல் நடத்தி, அவர் படும் அவஸ்தைகள் படம் முழுக்க ரசிக்க வைக்கும்.
ஆனால் இப்போது முதுமை உடல் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கிய நிலையில் படங்களில் ஜனகராஜ் நடிப்பதில்லை என்றாலும் அவர் பேசும் வசனங்களை பேசிதான் மிமிக்ரி கலைஞர்கள் இன்னும் மக்கள் மத்தியில் கைதட்டல் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஜெய்பீம், குட்நைட் படங்களில் நடித்த நடிகர் மணிகண்டனுக்கு ஜனகராஜ் குரலில் பேசுவதுதான் முக்கிய பொழுதுபோக்கு, தன்னை சுற்றி அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் ஜனகராஜ் வாய்ஸ் பேசி அவர்களை குஷிப்படுத்துவார். அப்படி நடிகர்களே விரும்பும் ஒரு அபூர்வ கலைஞன்தான் ஜனகராஜ். சுவரில்லாத சித்திரங்கள் படத்தில், டெய்லர் காளியண்ணன், பேப்பர் படித்துக்கொண்டு இருக்கும் ஜனகராஜிடம்தான் 2 ரூபாய் கேட்டு ஓரியாட்டம் செய்வார்.
ஒரு நேர்காணலில் நடிகர் ஜனகராஜ் கூறியதாவது, பாண்டிச்சேரி வரை ராஜசேகர் என்பவரது தங்கை திருமணத்துக்கு சென்றோம். திருமணம் முடிந்து காலையில் திரும்பி காரில் வரும்போது ஜிப்மர் அருகே, கல் ஒன்று பறந்து வந்து ஜன்னல் வழியாக என் கன்னத்தை தாக்கியது. அதில் என் தாடை உடைந்து விட்டது. ரத்தம் கொட்டி கதர் வெள்ளை வேட்டி, சட்டை எல்லாம் நனைந்துவிட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். என்னை சுற்றி 24 டாக்டர்கள் நின்றபோதே, எனக்கு பயம் வந்துவிட்டது.
படுக்கையில் படுத்து வாயில் டூப் சொருகி விட்டனர். கண்ணாடியில் முகத்தை பார்த்துவிடாதே என எச்சரித்தார் நர்ஸ். வாயில் இருந்த டூப்பை அகற்றிவிட்டு கண்ணாடியில் போய் முகம் பார்த்தேன். ஒரு பக்கம் 10 மடங்கு வீங்கியிருந்தது. இனி என்னுடைய சினிமா வாழ்க்கை அம்போதான் என அப்போதே புரிந்துவிட்டத. அதன்பிறகு வீட்டில் ஒரு வருடம் ஓய்வில் இருந்தேன். அதற்கு பிறகுதான் எனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது, என ஜனகராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…