பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றுள்ள படமாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றி நடைபோடுகிறது.
சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ், நடிகை பிரியங்கா மோகன் மற்றும் கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தணிக்கைக் குழு A1 சான்றிதழ் பெற்று, சுமார் 1000 திரையரங்குகளில் தனுசு ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக ‘கேப்டன் மில்லர்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.
இப்படத்தின் ‘ரைஸ் ஆப் மில்லர்’ பாடல் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த படம் ஆரம்பம் முதல் கடைசி வரை எதிர்பார்ப்பாகவே இருந்ததாக தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒரேநாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “அயலான்” திரைப்படமும், தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” திரைப்படமும், அருண் விஜய் நடிப்பில் “மெஷிஷன்” திரைப்படமும், விஜய் சேதுபதி நடிப்பில் “மேரி கிறிஸ்மஸ்” திரைப்படமும் பொங்கல் விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்த வரிசையில் கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது என்று ‘கேப்டன் மில்லர்’ பட குழுவினர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் தனுஷ் ரசிகர்களும் ” கேப்டன் மில்லர் ” படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
கேப்டன் மில்லர் படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் 8 கோடி வசூலையும், உலகம் முழுவதும் 17 கோடி வசூலையும் வாரிக்குவித்தது. அதே நேரத்தில், கேப்டன் மில்லர் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெளியானது. இப்படம் தமிழ்நாட்டில் 4 கோடி வசூலையும், உலகம் முழுவதும் 12 கோடி வசூலையும் ஈட்டியது என வசூல் ரிப்போர்ட்டில் வெளிவந்தது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…