முந்தானை முடிச்சு டைட்டிலில் இப்படி ஒரு சென்டிமென்ட் ஒளிஞ்சிருக்கா?.. அட இத்தனை நாள் இது யாருக்குமே தெரியலையே..!

By Nanthini on ஆனி 24, 2025

Spread the love

பொதுவாகவே சினிமா உலகில் சென்டிமென்ட்க்கு அனைவருமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முந்தானை முடிச்சு குறிப்பிட்ட பெரிய வெற்றி திரைப்படம். அந்தப் படத்திற்கு முதலில் பாக்கியராஜ் பரிந்துரைத்தது சின்ன வீடு என்ற டைட்டில்தான். இந்த படத்தின் பெயர் ஏவிஎம் சரவணனுக்கு ஏற்புடையதாக இல்லையாம். இதனால் இந்த பெயரை மாற்றிவிடலாம் என்று பாக்கியராஜிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு பாக்கியராஜ் என்னுடைய சொந்த படத்திற்காக முந்தானை முடிச்சு என்று டைட்டில் வச்சிருக்கேன், அதை வேண்டுமென்றால் மாத்திக்கோங்க என்று கூறியுள்ளார்.

முந்தானை முடிச்சு ரீமேக்.. பாக்கியராஜ் உடன் கைகோர்த்த சசி குமார்.. முருங்கை காய் காமெடி இருக்குமா? | Mundhanai Mudichu remake gets Bhagyaraj, Sasikumar combo! - Tamil ...

   

முந்தானை முடிச்சு படத்தை பொருத்தவரைக்கும் எட்டு எழுத்தில் டைட்டில் வரும். 8 எழுத்தில் பெயர் வைத்தால் பிடியோகஸ்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற சந்தேகம் ஏவிஎம் சரவணனுக்கு இருந்துள்ளது. பெரும்பாலும் அன்றைய காலத்து படங்களில் எட்டு எழுத்தில் பெயர் வைப்பதை ஒரு சென்டிமென்டாக பார்ப்பார்கள். அதனால் ஏவிஎம் தயங்கியுள்ளார்.

   

முந்தானை முடிச்சு ரீமேக்.. பாக்கியராஜ் உடன் கைகோர்த்த சசி குமார்.. முருங்கை காய் காமெடி இருக்குமா? | Mundhanai Mudichu remake gets Bhagyaraj, Sasikumar combo! - Tamil ...

 

அப்போதுதான் ஏவிஎம் சரவணன் இடம் விளம்பர பிரிவில் இருந்து அர்ஜுன் ஒரு யோசனை கூறியுள்ளார். முந்தானை முடிச்சு என்ற டைட்டிலில் 2 மு இருக்கு இதனால ஒரு “மு” வை பெருசா போட்டு அதுலையே முந்தானை முடிச்சு சமமாக பங்கிடலாம் எட்டு எழுத்து வராது 7 எழுத்துதான் வரும் என்று கூறியுள்ளார். அவர் சொன்ன அந்த யோசனை ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் அந்த டைட்டிலை வித்தியாசமாக அப்படி வடிவமைத்தனர். அந்த வகையில் முந்தானை முடிச்சு படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது.