திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த பேட்ரிக் சிலுவை முத்து(19) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்ததால் அந்த சிறுமி சிலுவை முத்துவுடன் பேச மறுத்து இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டிற்கு சென்ற சிலுவைமுத்து தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால் சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் சிறுமியை தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடங்க சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலுவை முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள்.
