#image_title
சாவித்திரி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாகவும் புகழ்பெற்ற நடிகையாகவும் திகழ்ந்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். சாவித்திரி இந்திய சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்பட்டவர். 1950கள் மற்றும் 60களில் புகழின் உச்சியில் இருந்த சாவித்திரி தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர்.
1950 60 70 என முப்பது ஆண்டுகால தனது சினிமா வாழ்க்கையில் சாவித்திரி 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடித்தது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் சாவித்திரி. ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த சாவித்திரி சிறுவயதிலிருந்தே நாடகங்களில் தோன்றி நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. தனது நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தக் கூடியவர் சாவித்திரி. அவரது நடிப்பை எவரும் குறை சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு தத்ரூபமாக நடிக்க கூடியவர் சாவித்திரி.
அப்படி அபாரமான நடிப்பை வெளிப்படுத்துவதால் நடிகர்கள் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக இவரை மக்கள் நடிகையர் திலகம் சாவித்திரி என்று அழைத்தனர். இது மட்டுமல்லாமல் மகாநதி சாவித்திரி என்றும் இவருக்கு ஒரு பெயரும் உண்டு. தமிழ் சினிமாவில் நடிக்கும் போது ஜெமினி கணேசனை சந்தித்த சாவித்திரி 1952 ஆம் ஆண்டு ஜெமினிகணேசனை மணந்தார். முறைப்படி சாவித்திரி ஜெமினி கணேசனுக்கு இரண்டாவது மனைவியாகும். அதற்குப் பிறகுதான் அவர் வாழ்க்கையே தடம் மாறி போனது என்று கூறலாம். தனது வாழ்நாளில் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக இருந்திருக்கிறார் சாவித்திரி. யார் கஷ்டம் என்று வந்தாலும் பண கட்டுகளும் நகைகளும் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார் சாவித்திரி. களத்தூர் கண்ணம்மா, பாசமலர், பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், கற்பகம், கர்ணன், கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, திருவிளையாடல் ஆகியவை சாவித்திரி நடித்த படங்களில் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
இவ்வளவு அபாரமாக நடிக்கும் நடிகை சாவித்ரி நடித்த காட்சிகளையே நீக்கி இருக்கிறார் ஏவிஎம் செட்டியார். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம். 1959 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் களத்தூர் கண்ணம்மா. இந்த திரைப்படத்தில் விவசாயின் மகள் கேரக்டரில் சாவித்திரி நடித்திருந்தார். அப்போது ஜெமினி கணேசனுடன் இணைந்து சாவித்திரி நடனமாடும் ஒரு டூயட் பாடலும் இருந்திருக்கிறது. சாவித்திரி மறந்து போய் அதிகம் மேக்கப்புடன் வந்து அந்த பாடலில் நடித்துக் கொடுத்து சென்று இருக்கிறார்.
தைப் பார்த்த ஏவியம் செட்டியார் சாவித்திரிக்கு என்ன கேரக்டர் கொடுத்து இருக்கீங்க என்று இயக்குனரிடம் கேட்கும் போது விவசாயின் மகள் என்று கூறியிருக்கிறார் இயக்குனர். உடனே கோபம் அடைந்த ஏவியம் செட்டியார் விவசாயியின் மகள் இவ்வளவு மேக்கப் போட்டுக் கொண்டு வருவார்களா என்று கேட்டிருக்கிறார். உடனே இயக்குனர் அவர் வெளியூர் சென்று படித்து வந்திருக்கிறார் போல் இந்த கதையில் இருக்கிறது என்று கூறுகிறார். உடனே ஏவிஎம் செட்டியார் வெளியிலிருந்து படித்து வருபவர்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கிறார்களா? விவசாயின் மகள் என்று கதாபாத்திரம் இருக்கும்போது இவ்வளவு மேக்கப் இருக்க கூடாது மேக்கப் இல்லாமல் அந்த பாடலை மறுபடியும் படம் எடுங்கள் என்று கூறி ஏற்கனவே சாவித்திரி நடித்த ஒரு பாடல் காட்சி முழுவதுமாக நீக்கி இருக்கிறார் ஏவியம் செட்டியார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…