“போனில் என்ன பாக்குற…?” ஆட்டோ ஓட்டி கொண்டே ஆபாசம்… பொய் சொல்லி சிக்கிய ரேபிடோ ஓட்டுநர்… நடுரோட்டில் அலறவிட்டுப் பாடம் புகட்டிய தைரியமான பெண் ….!!

By Devi Ramu on ஆவணி 3, 2026

Spread the love

சந்தைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்புவதற்காகப் பெண் ஒருவர் ரேபிடோ ஆட்டோவை பதிவு செய்து பயணித்துள்ளார். செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் தனது ஐபோனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்தவாறே வாகனத்தை இயக்கியுள்ளார். இதைக் கவனித்த அந்தப் பெண், உடனடியாக ஆட்டோவை வழியிலேயே நிறுத்தச் சொல்லி, “போனில் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என அதட்டி விசாரித்துள்ளார். முதலில் முகநூலில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்களின் வீடியோவை பார்த்ததாகப் பொய் சொன்ன அந்த ஓட்டுநர், போலிஸில் புகார் அளிக்கப் போவதாகவும் குடும்பத்தினரைக் கூப்பிடப் போவதாகவும் பெண் மிரட்டியதும் பயந்துபோய், வெளிநாட்டு ஆபாச வீடியோ பார்த்ததை ஒப்புக்கொண்டார்.

பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த ஓட்டுநருக்கு நடுரோட்டிலேயே வைத்து அந்தப் பெண் தக்க பாடம் புகட்டினார். மேலும் இது குறித்துச் சம்பந்தப்பட்ட ரேபிடோ நிறுவனத்திற்குப் உடனடியாகப் புகார் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பயணிகளைப் பாதுகாப்பாக இடஞ்சேர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓட்டுநர்கள் இதுபோன்ற மலிவான செயல்களில் ஈடுபடுவது, வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகப் பொதுமக்கள் தங்களின் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.