வேலை பார்க்கும் போது இப்படியா பண்ணுவீங்க…? “நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்து அட்டூழியம்…” நடத்துனரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் சிந்தகி தாலுகாவிற்குட்பட்ட காளஹள்ளி கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து அதிலிருந்த நடத்துனரைத் தாக்கியுள்ளார். இதற்கு முதல் நாள் மாதாரி கிராமத்திற்கு அருகே அரசுப் பேருந்துக்கும் ஆட்டோவிற்கும் இடையே வழி விடுவது தொடர்பாக எழுந்த வாக்குவாதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

முந்தைய நாள் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், பழிவாங்கும் நோக்கில் மறுநாளில் பேருந்தை மறித்து நடத்துனரைத் தாக்கியதால் பேருந்தில் இருந்த பயணிகள் பெரும் பீதி அடைந்தனர். பணியில் இருந்த அரசு ஊழியர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறையும் போக்குவரத்துத் துறையும் நேர்மையான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.