“அந்த விஷயத்துக்கு டார்ச்சர் செய்த அத்தை”… 15 வயது சிறுவன் செய்த கொடூரம்… வீட்டு சோபாவைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், ஒரு சிறுவன் தனது அத்தையை அடித்துக் கொன்று உடலை சோபாவிற்குள் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான சகுந்தலா சின்ஹே என்ற பெண்மணிக்கும், அவரது 15 வயது மருமகனுக்கும் இடையே பணப் பரிமாற்றம் தொடர்பாக நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதமே இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்துள்ளது.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன் வீட்டிலிருந்த மூங்கில் தடியால் அத்தையின் தலையில் பலமாகத் தாக்கினான். இதில் படுகாயமடைந்த சகுந்தலா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திகைத்துப் போன சிறுவன், கொலையை மறைப்பதற்காகத் தரையில் இருந்த ரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டு, சடலத்தை வீட்டிலிருந்த ‘சோபா-கம்-பெட்’ பெட்டிக்குள் திணித்து மூடி வைத்தான்.

யாரும் அறியாத வண்ணம் அந்தச் சிறுவன் அதே வீட்டிலேயே சில நாட்கள் தங்கியிருந்தான். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அக்கம் பக்கத்தினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சோபாவைத் திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் சகுந்தலாவின் சடலம் மீட்கப்பட்டது.

இந்தத் துர்நாற்றம் மற்றும் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சிறுவனைப் போலீசார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். தற்போது அந்தச் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். ஒரு சிறுவன் இவ்வளவு திட்டமிட்டுத் தனது சொந்த அத்தையையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“நாங்கள் தயார்”.. வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவா?… உலக நாடுகளை உலுக்கும் அமெரிக்காவின் அடுத்த மூவ்… அதிரும் சர்வதேச அரசியல்…!

சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…

1 minute ago

குக் வித் கோமாளியில் நடந்த அடுத்த சம்பவம்… மேடையிலேயே கதறி அழுத ரோஜா… என்ன ஆச்சு…?

சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…

8 minutes ago

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

13 minutes ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

14 minutes ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

22 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

26 minutes ago