தமிழகத்தில் மேட்ரிமோனி தளங்கள் மூலம் வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து அரங்கேற்றப்படும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், தனது இரண்டாவது திருமணத்திற்காகத் தகுந்த வரனைத் தேடி வந்துள்ளார். அப்போது தன்னை லண்டனில் வசிக்கும் ‘டாக்டர் ஹேமந்த்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒரு பெரும் செல்வந்தராகக் காட்டிக்கொண்ட அந்த நபர், வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட அந்த மர்ம நபர், ஒரு கட்டத்தில் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறி, அதற்கான அடையாளமாக லண்டனில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், தங்கக் கடிகாரங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளைப் பார்சல் மூலம் அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பிய அந்தப் பெண்ணுக்குச் சில நாட்களில் டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பேசுவதாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், உங்கள் பெயருக்கு வந்துள்ள பார்சலை விடுவிக்க வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளனர்.
பார்சலில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் ஆசையில், அந்தப் பெண் தனது சேமிப்பு மற்றும் நகைகளை விற்றுப் பல்வேறு தவணைகளாக மொத்தம் 25 லட்ச ரூபாயை அந்த மர்ம நபர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். பணம் கைமாறியவுடன், லண்டன் மாப்பிள்ளை என நடித்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், மோசடி செய்த நபர் தனது குரலை மாற்றவும், போலியான வீடியோக்களைக் காட்டவும் ‘AI’ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதே போன்ற ஒரு சம்பவம் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலும் அரங்கேறியுள்ள நிலையில், இது ஒரு சர்வதேச கும்பலின் திட்டமிட்ட கைவரிசையாக இருக்கலாம் எனச் சைபர் கிரைம் போலீஸார் சந்தேகிக்கின்றனர். முன்பின் தெரியாத நபர்கள் வெளிநாட்டிலிருந்து பரிசு அனுப்புவதாகக் கூறினாலோ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறிப் பணம் கேட்டாலோ பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சூழல்களில் உடனடியாக ‘1930’ என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…