பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அமைச்சர்களுக்கு எதிரான லஞ்சப் புகார்கள் தொடர்பான விவாதம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில அமைச்சர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அண்ணாமலை கூறி அதிர்வலைகளைக் கிளப்பிய நிலையில், அந்த ஆதாரங்களை அவர் வெளியிட்டால் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளும் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தங்களும் அதிகரித்துள்ளதால், தவறு செய்ததாகக் கருதப்படும் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்ற தகவல் தற்போதைய அரசியல் சூழலில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
