நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம் போல் கூடிய நிலையில் வழக்குகளின் விவரத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வக்கீல் ராகேஷ் கிஷோர் திடீரென்று நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி தன்னுடைய காலணியை கழட்டி தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினார்கள்.
இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சனாதனத்தை அவமதிக்கும் விதமாக பேசியதால் நீதிபதியை தாக்க முயன்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் கடவுள் சொல்லித்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்கினேன் என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்
