காதலியுடன் பேசிக்கொண்டிருந்த போது நடந்த கொடூரம்…! காரை ஏற்றிய தந்தை… “ரத்த வெள்ளத்தில் துடித்து…” நெல்லையில் பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 26, 2025

Spread the love

நெல்லை மாவட்டம் கடம்போடுவாழ்வு கிராமத்தில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகளை, முத்துச்செல்வன் என்ற இளைஞர் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இருவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட செல்வ கருணாநிதி, ஆத்திரத்தில் தனது காரை முத்துச்செல்வன் மீது ஏற்றி மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த பயங்கர மோதலில் முத்துச்செல்வன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து செல்வ கருணாநிதி மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் பிரமுகர் ஒருவர் தனது மகளின் காதல் விவகாரத்தில் இளைஞரைக் கொல்ல முயன்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.