இந்தூர் ராஜ நகர் பகுதியில், மத நிகழ்ச்சி ஒன்றிற்காக உஜ்ஜயினியில் இருந்து அழைத்து வரப்பட்ட யானைக்கு வெல்லம் ஊட்டியபோது, அது தாக்கியதில் விஜய் என்ற லட்சுமண் ராவ் ஹோல்கர் 49 என்ற ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். சடலமாக மீட்கப்பட்ட விஜய்க்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சந்தன் நகர் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, யானையுடன் வந்த அதன் பராமரிப்பாளரைக் மஹவ்த் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புப் பகுதியில் யானையை அழைத்துச் செல்லும்போது உரிய பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் இருந்த விஜய் யானைக்கு அருகில் சென்று வெல்லம் ஊட்ட முயன்றபோது, திடீரென ஆக்ரோஷமடைந்த யானை தனது தும்பிக்கையால் அவரைத் தூக்கி வீசி மிதித்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தார்.
