“மாதக்கணக்கில் வாடகை தரல…” தவறாக சித்தரிக்கிறாங்க…. பார்பிகியூ உணவை தட்டிவிட்டு கல்லை வீசி தாக்குதல்… வீட்டு ஓனர் வெளியிட்ட வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 14, 2026

Spread the love

கனடா நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் என்ற பெண், தனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த நபர் மீது அராஜகம் செய்ததாகக் கூறி சில வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. அந்த வீடியோவில், தோட்டப் பகுதியில் வாடகைதாரர் தனது நண்பருடன் பார்பிகியூ சமைத்துக் கொண்டிருந்தபோது, ராஜ் மரக்கட்டையுடன் வந்து உணவைத் தட்டிவிட்டு, அவர்களை மிரட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அதுமட்டுமன்றி, வாடகைதாரரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கல்வீசித் தாக்கியதாகவும், தொடர்ந்து தங்களுக்கு மன உளைச்சல் அளித்ததாகவும் வாடகைதாரர் குற்றம் சாட்டியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் கனடா போலிஸார் ராஜை கஸ்டடியில் எடுத்து விசாரித்து பின்னர் விடுவித்தனர்.

   

https://www.instagram.com/reel/DdLBL1JOwES/?utm_source=ig_web_copy_link&stkn=MzRlODBiNWFlZA==

   

இந்நிலையில், பஞ்சாபி மொழியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராஜ், “வாடகைதாரர்கள் பல மாதங்களாக வாடகை தராமல் வீட்டின் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும், தங்களுக்கு இடையேயான பிரச்சனை குறித்து டெனென்சி வாரியத்திடம் முறையிட்டு வீட்டை காலி செய்ய வைத்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும், தன்னை வீழ்த்த நினைத்தவர்கள் வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும், தற்போது வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.