வா உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்… 6 வயது சிறுமிக்கு… முதியவர் செய்த கொடூரம்… மகாராஷ்டிராவில் நேர்ந்த சம்பவம்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

By Swetha on புரட்டாதி 14, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், ஆறு வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

வீடு திரும்பிய சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் பரவியதும், அப்பகுதி மக்கள் கொதித்தெழுந்தனர். குற்றவாளி மீது கடு1மையான சட்ட நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் பெரும் போராட்டம் மற்றும் கொந்தளிப்பு நிலவுகிறது.