Connect with us

CINEMA

அப்போ, நேத்து போட்ட Meeting இதுக்குத்தானா.? தளபதி 69 படத்தை இயக்கப்போகும் PAN இந்திய இயக்குனர்..

தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் கோட்படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

   


நடித்துக் கொண்டிருக்கும் கோட் படமும் அடுத்த படமான 69 வது படமும் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக இறங்கப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னதாக விஜய் நடிக்கும் 69 வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று பலரும் ஆர்வத்துடன் கேட்டு வந்தார்கள்? அதில் அதிக வதந்திகள் பரவி வந்தனர், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என்று பல பேர் தளபதி 69 வது படத்தை இயக்கு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் பல வெளியானது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 69 படத்தை இதற்கு முன்னால் விஜயை வைத்து பல வெற்றிகளை கொடுத்த அட்லி தான் இப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் அவர்கள் தயாரிக்க சமந்தா அவர்கள் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது தற்போது. நேற்று அட்லீ அவர்களும் அவர் குழுவினரும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்திய வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அது விஜய்யின் 69 வது படத்திற்கான டிஸ்கஷன் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது. எச் வினோத் தளபதி வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது எச் வினோத் தனுஷ் அவர்களை வைத்து இயக்க உள்ளாராம்.

அதனால் அட்லி தான் விஜயின் 69 படத்தை இயக்க உள்ளார் என்று 99.9% உறுதியாக உள்ளது என்று வலைப்பேச்சு போன்ற யூடியூப் சேனல் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை, அதை விரைவில் தளபதி விஜய் அவர்கள் தரப்பிலிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மீண்டும் மெர்சல் போல் மெர்சலாக ஒரு அரசியல் கதை உருவாக உள்ளது என்று தகவல் தெரியவந்துள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் பாலிவுட் சூப்பர்ரான ஷாருக்கான் இப்படத்தில் காமெியோ ரோல் செய்ய உள்ளாராம். புதுவிதமான காம்போ சேர்வதால் ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top