தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் செல்வராகவன். “காதல் கொண்டேன்”, “7ஜி ரெயின்போ காலனி”, “புதுப்பேட்டை”, “ஆயிரத்தில் ஒருவன்” என 90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய பல திரைப்படங்களுக்குச் சொந்தக்காரராக இருப்பவர் இவர்.
இவர் இயக்கிய “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் வெளிவந்தபோது சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. ஆனால் அதன் பின் பத்தாண்டுகள் கழித்து இணையத்தில் பலரும் இத்திரைப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர். இத்திரைப்படத்தை டீகோட் செய்யாத யூட்யூப் சேன்னல்களே கிடையாது என்று கூறலாம். அந்தளவுக்கு இத்திரைப்படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை தொடர்ந்து “மயக்கம் என்ன”, “இரண்டாம் உலகம்”, “NGK”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “நானே வருவேன்” போன்ற திரைப்படங்களை இயக்கிய செல்வராகவன், தற்போது “7ஜி ரெயின்போ காலனி 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணன், “புதுப்பேட்டை” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சில சம்பவங்களை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது செல்வராகவன் தனது உதவி இயக்குனர்களை கண்டபடி அசிங்கமாக திட்டிக்கொண்டே இருப்பாராம். அவரை பார்த்தாலே அவரது 12 உதவி இயக்குனர்களும் ஓடிவிடுவார்களாம். “புதுப்பேட்டை” திரைப்படத்தில் பாவா லட்சுமணன் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.
இரண்டு நாட்கள்தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம் பாவா லட்சுமணன். செல்வராகவன் அவரையும் கண்டபடி திட்டத் தொடங்க, அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம். இவ்வாறு செல்வராகவன் படப்பிடிப்புத் தளத்தில் நடந்துகொள்ளும் விதம் குறித்து அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…