தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கிய நகைச்சுவை நடிகர் வடிவேலு, தனுஷுடன் இணைந்து எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. ஆனால் வடிவேலு தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் சில நாட்கள் நடித்திருக்கிறார். ஆனால் அத்திரைப்படத்தில் இருந்து வடிவேலு வெளியேறியிருக்கிறார். ஆம்!
கடந்த 2009 ஆம் ஆண்டு தனுஷ், தமன்னா, விவேக், சுமன் உட்பட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “படிக்காதவன்”. இத்திரைப்படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தனுஷின் கெரியரில் முக்கியமான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தில் விவேக் ஏற்று நடித்திருந்த அசால்ட் ஆறுமுகம் என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற கதாபாத்திரமாக ஆனது. அக்கதாபாத்திரத்தில் விவேக்கின் நடிப்பு பலரையும் சிரிக்கவைத்தது. இப்போதும் அத்திரைப்படத்தின் காமெடி காட்சியை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.
இந்த நிலையில் “படிக்காதவன்” திரைப்படத்தில் விவேக்கிற்கு பதில் முதலில் வடிவேலுதான் ஒப்பந்தமாகியிருந்தார். பல நாட்கள் வடிவேலுவும் தனுஷும் இடம்பெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. எனினும் தனுஷ் படப்பிடிப்பின்போது, “இப்படி நடியுங்கள் அப்படி நடியுங்கள்” என வடிவேலுவுக்கு அவ்வப்போது எப்படி நடிப்பது என சொல்லிக்கொடுப்பாராம். இதனால் வடிவேலு, “இவன்லாம் எனக்கு நடிப்பு சொல்லித்தர்ரதா?” என்று நினைத்து அந்த படத்தில் இருந்து சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டாராம். இத்தகவலை பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதன் பிறகுதான் அக்கதாபாத்திரத்தை விவேக் ஏற்று நடித்திருக்கிறார். எனினும் விவேக் அந்த கதாபாத்திரத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்று ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இப்போது விவேக்கின் கிளாசிக் காமெடி கதாபாத்திரங்களில் அசால்ட் ஆறுமுகம் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…