அட கடவுளே… நேபாளப் பேரழிவில் கண் முன்னே நின்ற மரணம்… 2 நாட்கள் உணவுமின்றி போராடி மீண்ட அசாம் தொழிலாளர்கள்… இன்னும் 8 பேர் கதி என்ன?… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் தீவிர மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர். நேபாளத்தில் உள்ள அப்பர் திரிசூலி-1 புனல் மின் திட்டப் பகுதியில் பணியாற்றிய இவர்கள், கடும் இரைச்சலைக் கேட்டு மலையை நோக்கி ஓடிப் பாதுகாப்பான உயரமான பகுதியில் தஞ்சம் புகுந்தனர். உணவு மற்றும் குடிநீரின்றி கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அவதிப்பட்ட அவர்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு பின்னர் காத்மாண்டு வழியாக அசாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

எனினும், இவர்களது மீட்ப்பு குடும்பத்தினருக்கு முழு நிம்மதியைத் தரவில்லை; ஏனெனில், இதே விபத்தில் சிக்கிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மற்ற 8 பேரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. அவர்கள் எந்தத் தகவலும் இல்லாமல் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அசாம் அரசு 16 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், அவர்களில் 8 பேருடன் மட்டுமே அதிகாரிகளால் தொடர்புகொள்ள முடிந்துள்ளது.

   

மாயமான மற்ற 8 தொழிலாளர்களைக் கண்டறியும் பணிகள் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உதவிக்காக அசாம் அரசால் சிறப்பு உதவி எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த அனுபவத்தை தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத மரண பயம் கலந்த தருணமாக விவரித்துள்ளனர்.