அசாம் மாநிலத்தில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகிழ்ச்சியில் 40 லிட்டர் பாலில் ஒருவர் குளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது. அசாம் மாநிலம் நல் பாரியில் உள்ள ஒரு கிராமத்தில் மாணிக் அலி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரின் மனைவி திருமணம் மீறி உறவில் இருந்ததாக கூறப்படுகின்றது. இருந்தாலும் தனக்கு பெண் குழந்தை இருப்பதால் தொடர்ந்து மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே இவரின் மனைவி இரண்டு முறை வீட்டை விட்டு வேறு ஒருவருடன் சென்றுள்ளார். அதனால் மன முடிந்த அவர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் நான் விடுதலை ஆகிவிட்டேன் என்று கூறி 40 லிட்டர் பாலில் ஆனந்த குளியல் போட்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
