“சன்னி லியோன் போட்டோ + சந்து” அஸ்வின் போட்ட வைரல் பதிவு.. இதுக்கு இதுதான் அர்த்தமா..? கண்டுபிடித்த இணையவாசிகள்…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளருமான இரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது முன்னாள் ஆபாச பட நடிகையும், இந்நாள் பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் குறித்த ஒரு புகைப்படத்தை அஸ்வின் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

ஒரு முக்கியமான கிரிக்கெட் போட்டி குறித்து அஸ்வின் தனது பாணியில் வாழ்த்து தெரிவிக்க விரும்பியுள்ளார். அதற்காக அவர் பயன்படுத்திய விதம் சுவாரஸ்யமானது. ஒருபுறம், நடிகை சன்னி லியோனின் புகைப்படத்தையும், மறுபுறம், சென்னையில் உள்ள ஒரு ‘சந்து’ (தெரு) ஒன்றின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் இணைத்து, ‘சன்னி சந்து’ (Sunny Sandhu) என்று பொருள்படும் விதமாக அந்தப் பதிவை அஸ்வின் உருவாக்கியுள்ளார். இந்த வார்த்தை விளையாட்டு  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், இணையத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.