ஆர்யா பண்ண சேட்டையால் நான் ரஜினி சார்கிட்ட மாட்டிகிட்டேன்… மேடையிலேயே போட்டுடைத்த சந்தானம்!

By vinoth on தை 17, 2025

Spread the love

சின்னத்திரை நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தான் நடிகர் சந்தானம். தற்போது இவர் வளரும் ஹீரோவாக இருக்கிறார்.

அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியில் ஒன்றுதான் லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்று கூறலாம். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகக்கூடிய படங்கள் அனைத்தையும் காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

   

அதிலிருந்து வந்த சந்தானம், சாமிநாதன், மனோகர், ஷேஷு உள்ளிட்ட பலர் இப்போது தமிழ் சினிமாவின் அடையாளம் பெற்ற நடிகர்களாக உள்ளனர். ஆனாலும் சந்தானம் அளவுக்கு யாராலும் உயர முடியவில்லை. அதற்குக் காரணம் சந்தானம், தன்னை சினிமாவுக்கு ஏற்றமாதிரி தகவமைத்துக் கொண்டதுதான்.

   

அதனால்தான் காமெடியனாக மட்டும் இல்லாமல் அவரால் ஹீரோவாகவும் வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பனான ஆர்யா பண்ண ஒரு சேட்டையால் தான் ரஜினிகாந்திடம் எப்படி மாட்டிக்கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

 

ஒரு மேடையில் பேசிய ஆர்யா “நானும் ஆர்யாவும் சேட்டை படத்தில் நடிக்கும் போது ஆர்யா எனக்கு ‘காமெடி சூப்பர் ஸ்டார்’னு டைட்டில் கொடுத்துட்டான். அது எனக்கே தெரியாது. அப்போ நான் ரஜினி சார் கூட லிங்கா ஷூட்டிங்ல இருந்தேன். ரஜினி சார் ‘என்னிடம் நீ காமெடி சூப்பர் ஸ்டாரா?’ எனக் கேட்டு கலாய்த்தார். எனக்கு பயமாகிவிட்டது.

அதைப் பற்றி நான் ஆர்யாவிடம் கேட்ட போது அவன் என்னிடம் “மச்சான் உனக்கு நான் செய்யாம வேற யாருடா செய்வா” என ஜாலியாகக் கேட்டு சிரிக்கிறான்” என தெரிவித்துள்ளார்.