“எனது ரேஷன் கார்டில் விஜய் பெயர் சேர்க்கணும்”… நான் செத்தாலும் என் சமாதியில்… பரபரப்பை கிளப்பிய மகளிர் அணி நிர்வாகி அருள்ஜோதி..!!

Spread the love

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டத்தில், அக்கட்சியின் நகர மகளிர் அணி அமைப்பாளர் அருள்ஜோதி பேசிய உணர்ச்சிப்பூர்வமான பேச்சு பெரும் வைரலாகி வருகிறது. மேடையில் பேசிய அவர், தான் உயிருடன் இருக்கும் போதே ஒருமுறையாவது விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்றும், ஒருவேளை தான் இறக்க நேரிட்டால் தனது உடலை எரிக்காமல் புதைக்க வேண்டும் என்றும், அந்தச் சமாதியில் விஜய்யின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

தனது குடும்பத்தினரை விடவும் தளபதி விஜய் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கையில் அவரது பெயரைப் பச்சை குத்தியிருப்பதாகக் கூறிய அருள்ஜோதி, தனது ரேஷன் கார்டிலும் விஜய் பெயரைச் சேர்க்க அதிகாரிகளிடம் சண்டையிட்டதாகக் கூறி அதிரவைத்தார். அங்கிருந்த தவெக நிர்வாகிகளிடம், “விஜய்யின் ஆதார் கார்டை வாங்கிக் கொடுத்தால் ரேஷன் கார்டில் அவர் பெயரைச் சேர்த்து விடுவேன்” என அவர் கேட்டது கூட்டத்தில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
Soundarya

Recent Posts

“சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை” ஆளுநர் மாளிகையின் திடீர் அறிவிப்பு.. சோகமான வீடு திரும்பிய விஜய்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…

33 seconds ago

BREAKING: ஆளுநரை சந்திக்காமல் U-Turn அடித்த விஜய்… கோட்டையை நோக்கி சென்றவருக்கு அனுமதி மறுப்பு..? பரபரக்கும் தமிழக அரசியல்

தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…

3 minutes ago

இவ்வளவு நாள் இழுத்தடித்து “மத்திய அரசின் அயோக்கியத்தனம்”.. என் ரத்தம் கொதிக்கிறது… விஜய் வீட்டின் முன் கொந்தளித்த மன்சூர் அலிகான்..!!

நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…

8 minutes ago

BREAKING: விஜய்யின் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…

13 minutes ago

“போலீஸ் ஸ்டேஷனுக்கே ஆப்பு வைத்த திருடன்”… விடிய விடிய அலைந்த போலீஸ்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம…

13 minutes ago

“எவ்வளவு சொல்லியும் கேக்காத எடப்பாடி”… வேலையை காட்டிய மார்டின் குடும்பம்.. கோதாவில் இறங்கிய லீமா ரோஸ்…!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிகார மோதலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

21 minutes ago