BREAKING: மக்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் நாளை(அக்..11) அனைத்து கிராம ஊராட்சிகளிலும்… சற்றுமுன் அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு சார்பில் வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொண்டு மக்கள் தங்களுடைய குறைகளை கூறி தீர்வு காணலாம். இப்படியான நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 11 நாளை கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊர், தெரு, சாலையின் ஜாதி பெயர்களை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

சமீபத்தில் ஊருகளுக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது நிதி, டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் அரசு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.