எல்லையைக் காத்த வீரனுக்கு சொந்த மண்ணில் நேர்ந்த விபரீதம்… சதாப்தி எக்ஸ்பிரஸ் மோதி உடல் சிதறி ராணுவ வீரர் உயிரிழப்பு…. சோக சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 24, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி பகுதியில், நாட்டிற்காக எல்லையில் துடிப்புடன் பணியாற்றி வந்த ராணுவ வீரர் மகேந்திரன் (41) ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வருகை தந்திருந்த அவர், கடந்த சாமல்பட்டி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து எல்லையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு வீரன், சொந்த மண்ணில் இதுபோன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசத்திற்காக உழைத்த அந்த மக்கள் நாயகனின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் கண்ணீருடன் செலுத்தி வருகின்றனர்.