45 நாளாக ICU-வில் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு?…. தொடரும் மௌனம்…. உண்மையான நிலை என்ன?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!

By Nanthini on ஐப்பசி 24, 2026

Spread the love

சுவாசக் கோளாறு காரணமாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்த தற்போதைய நிலை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொடக்க நாட்களில் தினசரி மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராதது பொதுமக்களிடையே சந்தேகங்களையும் பல்வேறு ஊகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நீடிக்கும் இந்த மௌனம் அரசியல் வட்டாரங்களிலும் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கவலையை அதிகரித்துள்ளதால், வதரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மருத்துவமனை நிர்வாகமும் அரசும் வி.எஸ். பாபுவின் உண்மை நிலையைக் குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.