ஜென்டில்மேன் படத்துக்கு ஹீரோவா அர்ஜுனை முதலில் தேர்ந்தெடுக்கவில்லை… மனம் திறந்த இயக்குனர் ஷங்கர்…

By admin on ஐப்பசி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷாங்கர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் பணியாற்றியிருக்கிறார் ஷங்கர். சினிமாவில் அதிக வசூல் செய்யும் படங்களை இயக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

   

இயக்குனர் ஷாங்கரின் படங்கள் பொதுவாக சமூக பிரச்சினைகள் விழிப்புணர்வு கருப்பொருட்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் VFX பயன்பாடு ஆகியவற்றை கொண்டு இருக்கும். 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அடுத்ததாக 1994 ஆம் ஆண்டு காதலன் 1996 ஆம் ஆண்டு இந்தியன் 1998 ஆம் ஆண்டு ஜீன்ஸ் 1999 ஆம் ஆண்டு முதல்வன் என்று தொடர்ந்து அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர் ஷாங்கர்.

   

தொடர்ந்து அந்நியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், எந்திரன் 2, நண்பன், ஐ, இந்தியன் 2 போன்ற திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்கள் ஒருவராக இருக்கிறார் ஷாங்கர். இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ஜென்டில்மேன். இந்த திரைப்படமும் சமூகநீதி கருத்தை கொண்டிருக்கும். இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார் ஷங்கர்.

 

இயக்குனர் சங்கர் கூறியது என்னவென்றால், ஆரம்பத்தில் ஜென்டில்மேன் படத்துக்கு அர்ஜுனை ஹீரோவாக நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. முதலில் இந்த படத்தில் நடிப்பதற்காக சரத்குமாரிடம் பேசினோம். அடுத்ததாக கமல்ஹாசன் அவர்களிடம் பேசினோம். ஒத்து வரல. அதுக்கு அப்புறம் தான் அர்ஜுனிடம் கதை சொல்லி பேசி நடிக்க வைத்தோம் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ஷங்கர்.