இத்தனை வருஷம் உங்களை யார் விட்டுவச்சாங்கனு ரஜினி கேட்டார்… ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை…

By admin on ஐப்பசி 7, 2024

Spread the love

வெண்ணிற ஆடை நிர்மலா கும்பகோணத்தில் சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாந்தி என்பதாகும். இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா.

   

வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களை மலையாள திரையுலகில் உஷா குமாரி என்று அழைக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு சிவி ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனால் இவரது பெயரை வெண்ணிற ஆடை நிர்மலா என வைத்துக்கொண்டார். தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளை சேர்த்து 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா. இவர் ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடன கலைஞரும் ஆவார்.

   

நடிகர்கள் மட்டுமல்லாமல் வெண்ணிற ஆடை நிர்மலா தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் அவர்கள் சகோதரியாக ஏற்றுக்கொண்டு தனது அரசியல் வாரிசாக அறிவிக்க நினைத்த ஒரே நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் தான். ஆனால் அரசியலில் நாட்டம் இல்லாததால் அதை அன்போடு மறுத்துவிட்டார் வெண்ணிற ஆடை நிர்மலா. பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா. ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் ரஜினிகாந்த் அவர்களை பற்றி பேசி இருக்கிறார்.

 

அவர் கூறியது என்னவென்றால் ரஜினிகாந்த் சார் சூட்டிங்ல எப்பவும் கலகலப்பா பேசிகிட்டு இருப்பார். அருணாச்சலம் படத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சோம். அப்போ என்ன வந்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டாரு. என்னங்க நீங்க உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா. நீங்க போய் என் மாமியாரா நடிக்க போறீங்களா யாராவது ஒதுக்குவாங்களா அப்படின்னு கலாய்ச்சார். அதுக்கப்புறம் எப்படி நீங்க கல்யாணம் பண்ணாம இருக்கீங்க இவ்வளவு நாள் உங்களை யாரும் கல்யாணம் பண்ணாம விட்டு வச்சாங்க என்று ரொம்ப கிண்டல் அடித்தார் என்று ரஜினிகாந்தை பற்றி பேசி இருக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா.