ஐயோ கொடுமையே… கர்ப்பிணி மனைவியுடன் போனில் தகராறு… கணவன் தூக்கிட்டு தற்கொலை… வீடியோ பார்த்து அதிர்ச்சியில்…. மனைவி எடுத்த கொடூர முடிவு…!

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

பெங்களூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த இமாச்சலப் பிரதேசத்தின் அமீர்பூரைச் சேர்ந்த ரோஹித் என்பவருக்கும், அவரது சொந்த ஊரில் கர்ப்பிணியாக இருந்த மனைவி நந்தினிக்கும் இடையே தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் உச்சக்கட்ட கோபத்தில், ரோஹித் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன் கணவன் தூக்கில் தொங்கும் பயங்கரமான வீடியோ காட்சி நந்தினியின் கைபேசிக்கு வந்தடைந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியும் சொல்லொணாத வேதனையும் அடைந்த அவர், மனமுடைந்து உடனடியாக கழிப்பறை சுத்திகரிப்பு திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

   

உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட நந்தினி, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தொடர் சோகச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வாக்குவாதத்திற்கான காரணம் மற்றும் வீடியோ அனுப்பப்பட்ட பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.