இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல் அவிவ் நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையம் மற்றும் பல மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இந்தத் தாக்குதலில், டெல் அவிவ் சவிடோர் மத்திய ரயில் நிலையம் பலத்த சேதமடைந்ததுடன், நகரின் ஒன்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு நபர் காயமடைந்த நிலையில், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் மோதல்களின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை மழை பொழிந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்குப் பதிலடியாக ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக மாறி உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்குமோ என்ற அச்சம் சர்வதேச சமூகத்திடையே எழுந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…