இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் லைப் ஸ்டைலே மாறிப்போனது. எது செய்ய வேண்டும் எது செய்யக்கூடாது என்றே பலருக்கு தெரிவதில்லை. கண்ட நேரத்தில் கண்டவைகளை சாப்பிடுவதால் உடல் உபாதைகள், இளம் வயது மரணங்கள் போன்றவை நடக்கின்றன. அதில் ஒன்றுதான் தினமும் Bed Coffee குடிப்பது. அதை நீங்கள் செய்பவராக இருந்தால் உடனே நிறுத்திவிட்டு காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க தொடங்குங்கள். அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.
நமது உடம்பில் 70 சதவீதம் நீர் சத்து இருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் உடலில் அனைத்து உறுப்புகளும் இயல்பாக சீராக இயங்க போதுமான நீர்ச்சத்து அவசியம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் எல்லா உடல் சார்ந்த பிரச்சனைகளையும் குணப்படுத்த முடியும். தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் 25% வளர்ச்சிதை விகிதத்தை உயர்த்துகிறது. இதனால் உணவு விரைவாக செரிமானம் ஆகும்.
இப்படி செய்வதனால் அது உடல் எடையை வேகமாக குறைக்க உங்களுக்கு உதவி செய்கிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எப்படி என்றால் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையானது போதுமான நீர் ஆகும். தொற்று நோய்களை எதிர்த்து போராட நீர்ச்சத்து உணவில் அதிகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் செரிமானத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் குடலில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற உதவும். குடல் இயக்கங்களுக்கு உதவுவதோடு எந்தவித கழிவுகளையும் தேங்காமல் வெளியேற்றும்.
இப்போது பிரபலமாக சொல்லப்படும் டீட்டாக்ஸ் என்ற முறையில் உடல் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு முதலாவது செய்ய வேண்டியது வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுதான். இது குடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலில் தங்கி இருக்கும் நச்சு தன்மையை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
உடலில் நீர் சத்து குறைவாக இருந்தால் அது தலைவலிக்கு வழிவகுக்கும். அதனால் அடிக்கடி ஒற்றைத் தலைவலி மைகிரைன் தலைவலி பிரச்சினை எதிர்கொள்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் கொடுத்து வந்தால் தலைவலி குறையும்.
இது மட்டுமல்லாமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் நமது தோல் சுருக்கங்கள் இல்லாமல் சருமம் பொலிவாக இருக்கும். இப்படி நீங்கள் ஒரு வாரம் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அதனது மாற்றங்களை உடனே நீங்கள் உணர்வீர்கள்.