தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் படப்பிடிப்பின் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கியுள்ளன. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டரை பயன்படுத்தவுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், எனவே, இரண்டு கதாநாயகிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தளபதி 68ல் சினேகா நடிப்பதை உறுதி செய்யும் விதமாக சினேகா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. முதலில் இது தளபதி 68 படத்திற்காக என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், இது தளபதி 68 படத்திற்காக கிடையாது, சினேகா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து நடிக்கும் ஷாட் பூட் த்ரீ படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பது என்பதை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது வருத்தத்தில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…