Categories: சினிமா

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அருண்.. காதலனை கட்டியணைத்து அன்பை பரிமாறிய அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென அவர் விலகியதால் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஏற்கனவே எலிமினேட் ஆகிய வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக்பாஸ்.

பிக் பாஸ் நாக் அவுட் சுற்று மூலம் எட்டு போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் இவர்களில் தீபக் மற்றும் அருள் இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கேல் வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ரயான். தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  இப்படியான நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் தான் அருண். பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி மக்களுக்கு ஓரளவுக்கு பிடித்துப்போன போட்டியாளராக மாறினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டே தன்னுடைய காதலியான அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது அடிக்கடி கேமிரா மூஞ்சி என்று அர்ச்சனா குறித்து பேசுவது என பல க்யூட்டான விஷயங்களை செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இவருடைய இயல்பான குணங்கள் சில மக்களைக் கவர்ந்தன. வீட்டுக்குள் தனது காதலியும் ஏழாவது சீசனின் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவை சக போட்டியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தது பெற்றோர்களிடம் காதலுக்கு கிரீன் சிக்னல் வாங்கியது என பல விஷயங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அருணுக்கு அமைந்துவிட்டது. இந்த சீசனில் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அருண் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இன்னும் ஒரு வாரம் தான் போட்டி உள்ளது என்ற போதும் ரசிகர்கள் ஆசுவாசமாகிவிட்டன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய காதலி அர்ச்சனாவை சந்திக்க அருண் சென்றுள்ளார். தன்னை பார்க்க வந்த அருணை இறுக்கமாக கட்டிப்பிடித்து அர்ச்சனா வரவேற்றார். இது தொடர்பான வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ள அர்ச்சனா, அருண் வந்துவிட்டார், நான் இப்போது அவருடன் இருக்கின்றேன். இந்தப் போட்டி மூலம் தான் யார் என்று இந்த உலகிற்கு அருண் காட்டியுள்ளார். அவருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று அர்ச்சனா பதிவிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago