100 கோடியை தொட்டுவிட்டதா அரண்மனை 4.. உலகம் முழுவதும் 19 ஆவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

By Mahalakshmi on வைகாசி 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படத்தின் 19 ஆவது நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு திரைப்படங்கள் எதுவும் நல்ல வரவேற்பு பெறவில்லை.

   

ஆனால் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 90களில் சினிமா பயணத்தை தொடங்கிய சுந்தர் சி 30 வருடங்களுக்கு மேலாக கமர்சியல் திரைப்படங்களை இயக்கி வருகின்றார். இவரின் திரைப்படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஹாரர் மூவிகளை இயக்கி வரும் சுந்தர் சி அரண்மனை திரைப்படத்தை தொடர்ந்து சீரியஸ்களாக இயக்கி வருகிறார்.

   

 

அரண்மனை நல்ல வரவேற்பு பெற்று நிலையில் அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. இதனால் அரண்மனை 4 திரைப்படத்தை எப்படியாவது நல்ல வெற்றி படமாக மாற்றி விட வேண்டும் என்று சுந்தர் சி சிறப்பாக இயக்கியிருந்தார். அதற்கேற்றார் போல் படமும் நல்ல வசூலை செய்திருந்தது.

இந்த திரைப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க அவருக்கு தங்கையாக தமன்னா நடித்திருந்தார். மேலும் ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்க குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் சொந்த தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்நிலையில் அரண்மனை 4 முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 32 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது வாரம் 17. 15 கோடி, மூன்றாவது வாரம் 1.2 கோடி வசூல் செய்துள்ளது. அதைத்தொடர்ந்து 19 ஆவது நாளான இன்று 0.9 கோடி வசூல் செய்து மொத்தம் நாடு முழுவதும் 62. 25 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் மட்டும் 56. 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் வெளிநாட்டிலும் இந்த திரைப்படம் 18 கோடியை வசூல் செய்து உலகம் முழுவதும் மொத்தம் 84.25 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. அரண்மனை 4 திரைப்படம் இதனால் குஷ்பூ மற்றும் சுந்தர் சி இருவரும் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள்.