புதிய கட்சி தொடங்கிய கூல் சுரேஷ்.. கட்சியின் பெயர் இதுதான்.. விஜய் இணைந்தால் அவருடைய கட்சிக்கு ப்ள்ஸ்-ஆ இருக்குமாம்..

By Mahalakshmi on மே 22, 2024

Spread the love

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சியை தொடங்கி போட்டியிட உள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் பேட்டி ஒன்றை அளித்து இருக்கின்றார். மேலும் தனது கட்சிக்கு சிஎஸ்கே என அவர் பெயர் வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியில் இணைந்தால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பிளஸ்-ஆக இருக்கும் என்று அவர் பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கூல் சுரேஷ். தொடர்ந்து சிம்பு, அஜித், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் அவரது திரைப்படங்களை இலவசமாகவே பிரமோஷன் செய்து வருவார்.

   

அதிலும் வெந்து தணிந்தது காடு , சிம்புவுக்கு வணக்கத்தை போடு என்கின்ற டயலாக் இவரை மிகவும் பிரபலமாக்கி விட்டது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படத்திற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு படம் பற்றி விமர்சனம் கூறுவார். அதிலும் எந்த திரைப்படத்திற்கு செல்கிறாரோ அப்படத்திற்கு ஏற்றார் போல் கெட்டப் போட்டுக் கொண்டுதான் செல்வார்.

 

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் வீட்டில் கடைசி வரை நீடித்தார். எதார்த்தமாக பேசி நல்ல வரவேற்பு பெற்றிருந்தார் சமீபத்தில் கூட தனது மனைவியை இழந்து கஷ்டப்பட்டு வந்த ஒரு நபருக்கு ஆட்டோ ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் இவர் தன்னை பிரபலமாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியிருக்கின்றார்.

கூல் சுரேஷ் அதற்கு கூல் சுரேஷ் கட்சி என பெயரிட்டு சிஎஸ்கே என்று அறிவித்திருக்கின்றார். அந்த பேட்டியில் அவர் பேசியிருந்ததாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த கட்சியை தொடங்குகிறேன். விருப்பம் இருந்தால் எனது கட்சிக்கு ஓட்டளியுங்கள். கட்டாயம் நான் வெற்றி பெறுவேன்.

மக்களுக்கு கடந்த 2000 ஆண்டிலிருந்து நான் நல்லது செய்து கொண்டு இருக்கின்றேன். ஆனால் அதை எதையும் வெளியில் சொன்னது கிடையாது. தற்போது கூட ஒரு நபருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தேன். வெயிலுக்கு ஏற்ப நீர் மோர் பந்தல் அமைத்துக் கொடுத்தேன். பல இடங்களில் ரத்த முகாம் நடத்தினேன். மேலும் விஜய் இணைந்தால் தமிழக வெற்றி கழகத்திற்கு பிளஸ் ஆக இருக்கும்” என்று அவர் பேசி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.