அறந்தாங்கி நிஷா கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு நிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான மாரி 2 திரைப்படத்தில் அட்டு ஆனந்தி கதாபாத்திரத்தில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4 அறந்தாங்கி நிஷா போட்டியாளராக பங்கேற்று 70 நாள் அங்கேயே இருந்தார். இவரது நகைச்சுவைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா தனது 14 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பாக கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். அதில், உங்களோடு என் வாழ்க்கை ஆரம்பித்து 13 வருடம் முடிந்து 14 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறேன். என்னால் நம்பவே முடியல.
சின்ன புள்ளையிலிருந்து பார்த்த முகம்தான். இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட இஷ்டத்துக்கு எல்லாம் இருக்க முடியுமான ரொம்ப பயந்தேன். இப்போ வரைக்கும் என்னோட கனவை உங்க கனவா பார்த்துட்டு இருக்கீங்க. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தீங்க. வாழ்க்கையில் ஒரு சிறந்த நண்பனா எப்பவும் என் கூட இருக்கீங்க. வாழ்த்துக்கள் தங்கமே, இன்னும் பல ஆண்டுகள் உங்களோடு சிறந்த தோழியா மனைவியா பயணிச்சிட்டு இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…
தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…