இந்தியாவின் புகழ்பெற்ற சினிமா பிரபலங்களில் ஒருவர் AR ரஹ்மான் . உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். 1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான AR ரஹ்மான் முதல் படத்தின் மூலமாகவே பல விருதுகளை வென்றார்.
தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் தனித்துவமான இசை அமைத்து மிகப் பிரபலமான AR ரஹ்மான் 2009 ஆம் ஆண்டு ஆங்கில திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக ஆஸ்கார் விருதை வாங்கி தமிழ் சினிமாவை உலக அளவில் பிரபலமாக வைத்தார் AR ரஹ்மான் . இது மட்டுமல்லாமல் இவரை ஆசியாவின் மெர்சா்ர்ட் என்று கூறுகின்றனர்.
AR ரகுமானை பற்றி வைரமுத்து ஒரு தகவலை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் ஒவ்வொரு பாடலுக்கும் AR ரஹ்மான் தாமதமாக்குவார். அவர் தாமதமாக்குவது வேண்டுமென்றே செய்வதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் புதுப்புது மெட்டுகளை அமைத்து அது நன்றாக இருக்கிறதா என்று கேட்டு பார்ப்பார்.
அது சரி இல்லை என்றால் மறுபடியும் புதிதாக ஒரு மெட்டை போடுவார். அவர் போடும் மெட்டு தனித்துவமாக இருக்க வேண்டும். வேறு யாரும் செய்வது போல் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்து மீண்டும் மீண்டும் ஒரு பாடலுக்காக உழைத்து தரமாக ஹிட்டு தரக்கூடிய பாடல்களை அவர் உருவாக்குவார். அதனால் தான் அவர் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பதற்கான நேரம் தாமதம் ஆகிறது அதிக நேரம் எடுத்துக் கொள்வார் என்று உண்மையை கூறியிருக்கிறார் வைரமுத்து.