கேப்டனின் ஷூட்டிங்கில் எப்போதும் அது இருக்குமாம்… யாருக்கும் தெரியாத விஷயத்தை சொன்ன வாகை நாராயணன்..!

By Soundarya on ஜனவரி 6, 2025

Spread the love

கேப்டன் விஜயகாந்த் 1979இல் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த சினிமாவில் அறிமுகமானார். எந்த சினிமா பின்புறமும் இல்லாத விஜயகாந்த் கதாநாயகனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்கு வந்தார். ஆனால் முதல் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார்.

#image_title

சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார்.

   
   

 

பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். தான் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட காரணத்தினால் எல்லோருக்கும் சமமா சாப்பாடு போட்டவர்.  கேப்டன் படத்தின் ஷூட்டிங் இல் அவர் ஒரு பழக்கத்தை கொண்டிருந்தார்.

அதாவது மதிய நேரத்தில் அனைவருக்கும் சாப்பாடு கொடுத்த பிறகு எல்லோருக்கும் கடலை மிட்டாய் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் கேப்டன். இந்த வழக்கத்தை கேப்டன் கடைபிடிப்பதற்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தவர் தயாரிப்பாளர் ராமநாராயணன். இவருடைய பல படங்களில் நடித்த கேப்டன் தன்னுடைய நெருங்கிய நண்பரான சந்திர சேகருடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ராமநாராயணன் செட்டிநாடு உணவை விரும்பி சாப்பிடுபவர். அப்படி ஒரு நாள் தனக்கான மனித மதிய உணவு இடைவேளையில் அங்கு இருந்த எல்லாருக்குமே ராமநாராயணன் கடலை மிட்டாய் கொடுத்தாராம். இதை பார்த்த அங்கிருந்த வாகை சந்திரசேகர்,” இது எதற்காக கொடுக்குறீங்க” என்று கேட்க, அதற்கு ராம நாராயணன் சும்மா சாப்பிடுங்க மதிய சாப்பாடு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிட வேண்டும். இனிப்பு சாப்பிட்டால் தெகட்டும். அதற்கு இது போன்ற கடலை மிட்டாய் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம். இதை பார்த்துக் கொண்டிருந்த கேப்டனுக்கு இராமநாராயணன் சொன்ன விஷயம் பிடித்து போனதால் அவரும் அதையே கடைபிடிக்க ஆரம்பித்தாராம். இந்த தகவலை வாகை சந்திரசேகர் சமீபத்தில் ஒரு பெட்டியில் கூறியிருந்தார்.