ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக உயர்ந்து தற்போது சிறந்த நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நடிகனாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காக்கி சட்டை, நம்ம வீட்டு பிள்ளை உள்பட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக இந்த படத்தில் நடிக்கிறார். முன்னதாக ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இது தொடர்பாக சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தில் ஏ.ஆர் முருகதாஸை டேக்ஸ் செய்து பதிவிட்டிருப்பதாவது, எனது 23-வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
Dear @ARMurugadoss sir,
Wishing you a very happy birthday sir ????????
Sir I’m extremely delighted to join with you for my 23rd film and I’m double delighted after listening to your narration. This film is going to be very special for me in all aspects and I can’t wait to start… pic.twitter.com/XiOye1GmuL
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 25, 2023
