தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தூய்மைப்படுத்தும் பணியின் முடிவில் வாக்காளர் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் இருந்த 40,04,694 வாக்காளர்களில் சுமார் 14.25 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 25,79,676 வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
