வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா..? இல்லையா..? சரிபார்ப்பது எப்படி..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் (SIR) பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவுப் பட்டியலில் சுமார் 97.37 லட்சம் (97,37,831) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .  சுமார் 26.94 லட்சம் (26,94,672) வாக்காளர்கள் உயிரிழந்த காரணத்தால் நீக்கப்பட்டுள்ளனர். முகவரி மாற்றம் அல்லது நிரந்தரமாக இடம் பெயர்ந்த காரணத்திற்காக 66.44 லட்சம் (66,44,881) வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்திருந்த 3.39 லட்சம் (3,39,278) வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் உங்களுக்கு வாக்கு இருக்கிறதா? என்பதை ஈசியாக ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம். https://voters.eci.gov.in/’Search in Electoral Roll’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு  ‘Search by EPIC’ என்ற இடத்தில் உங்கள் அடையாள அட்டை எண், மாநிலத்தை பதிவு செய்தால் உங்களுடைய முழு விவரம் வந்துவிடும்.